Breaking
Mon. Dec 23rd, 2024
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்த சிலர் இன்று (3) நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு வருவோரில் 145 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குவைத்  நாட்டிலிருந்து வருகை தந்த இலங்கையர்களில் 100 பெண்கள் அடங்குகின்றனர். அத்துடன், டுபாய் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து மேலும் 30 பேர் வருகை தந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவூதி அரேபியாவிலிருந்து 15 பேரும் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் பொறுப்பேற்று அவர்களை வீடுகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

By

Related Post