Breaking
Tue. Jan 7th, 2025

துபாய் பன்னாட்டு விமான நிலையம் இந்த ஆண்டின் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.சிறந்த விமான நிலையம்

துபாய் பன்னாட்டு விமான நிலையம், மத்திய கிழக்கு நாடுகளில் மிகச் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலேயே துபாய் பல்வேறு வகைகளில் முன்னணியில் உள்ளது.Êசமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் கூட, மக்கள் வாழ்வதற்கு சிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள விமான நிலைய சேவைகளை மதிப்பிட்டு துபாய் விமான நிலையம் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் உள்ள தொடர் விமான பயணிகளின் கருத்துக்களின் அடிப்படையில் ‘மத்திய கிழக்கு வர்த்தக பயணிகள் விருது 2015’–க்கு துபாய் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் விமான நிலையங்களின் வர்த்தக அபிவிருத்தி தொடர்பு துணைத்தலைவர் அனிதா மிஸ்ரா கூறியதாவது:–கடுமையான உழைப்பு

இந்த விருதை பெற்றதற்கு நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இது நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு செய்யும் சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறோம். மேலும் நாங்கள் உலக விமான நிலையங்களிலேயே சிறந்த முதல் விமான நிலையமாக இருக்க விரும்புகிறோம். அதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம்.

மேலும் இந்த விமான நிலையம் பயணிகளின் பெட்டிகளை சோதனை செய்தல், போக்குவரத்து வசதிகள், விமான இணைப்பு வசதிகள், சரக்கு கையாளுதல், பாதுகாப்பு சோதனை, சுங்கச்சோதனை, கூட்ட அரங்கு வசதிகள், உணவு விடுதல் மற்றும் ஷாப்பிங் வசதிகள் ஆகிய வசதிகளின் அடிப்படையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் விமான நிலையம், பயணிகள், உணவு அருந்துதல், ஷாப்பிங் செய்தல் மற்றும் ஓய்வெடுத்தல் ஆகிய வசதிகளை மேம்படுத்த பெரிய தொகை முதலீடு செய்து இருக்கிறோம். இதன் மூலம், துபாய் பன்னாட்டு விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் பெரும் பலன் அடைவார்கள். சமீபத்தில் முனையம் 2–க்கான விரிவாக்கம், முனையம் 1–ஐ புதுப்பித்தல் பணி உள்ளிட்டவைகளுக்காக 1.2 மில்லியன் டாலர் தொகை செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Post