கொழும்பிலிருந்து ஒட்டமாவடி அஹமட் இர்ஸாட்
பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவை வெற்றியடைய செய்யுமுகமாக நேற்று (15) திங்கட் கிழமை மத்திய கொழும்பு ஆசனத்தில் உள்ள கொச்சிக்கடை பிரதேசத்தில் மக்கள் ஒன்று கூடலுடனான பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
எப்போதும் போல இன, மத, மொழி, வேறுபாடின்றி சமூமளித்திருந்த வாக்காளர்கள் மத்தியில் உரையாற்றிய மேல் மாகான சபை உறுப்பினரும், மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர்களுள் ஒருவரான பைரூஸ் ஹாஜி, இம்முறை ஜானாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன 85,000 மேலதீக வாக்குகளால் மத்திய கொழும்பு ஆசனத்தில் அமோக வெற்றிபெறுவார் எனத் தெரிவித்ததோடு, அரசாங்கம் இந்த தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 50 ரூபாவுக்கும், கேஸ் சிலிண்டரின் விலையை 995 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் இவ்வாறான போலிவித்தைகளை கண்டு நாட்டு மக்கள் ஏமாற போவதில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் அரசாங்கத்தின் வங்குரோத்து நிலைமைகளையும், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அளவுக்கதிகமான வரிச்சுமைகளையும் பற்றி உரையாற்றியதோடு, அபிவிருத்தி எனும் பெயரில் நாட்டில் நடந்தேறிக் கொண்டிருக்கும் பகற்கொள்ளைகளைப் பற்றியும் விளாவாரியாக தெளிவுபடுத்தினார்.
இக்கூட்டத்துக்கு மற்றுமொரு ஐக்கிய தேசிய கட்ச்சியின் மேல்மாகண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு அமைப்பளருமான முஜிபுர் ரஹ்மானும் சமூகமளித்திருந்தார்.