மத்திய மாகாண சபையின் அமர்வுகள் நேற்று பேரவை தலைவர் எல்.டி. நிமலசிறி தலைமையில் பல்லேகலவில் உள்ள மாகாண சபை அவையில் நடைபெற்றது.
மத்திய மாகாண சபை உறுப்பினரான அசாத் சாலிக்கு மாத்திரம் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் ஏனைய உறுப்பினர்களுக்கு அந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனால், சபையில் பெரும் அமளியான நிலைமை ஏற்பட்டது.
இதனையடுத்து அசாத் சாலி தொடர்பில் உறுப்பினர்கள் வெளியிட்ட அனைத்து கருத்துக்களையும் சபை குறிப்பில் இருந்து நீக்குமாறு பேரவை தலைவர் உத்தரவிட்டார்.
அசாத் சாலி கட்சித் தலைவர் என்பதால், அவருக்கு மாத்திரம் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறினாலும் அதனை ஏற்க முடியாது என ஏனைய உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.