பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சிபார்சின் பேரில் மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நியமனக் கடிதத்தினை வழங்கி வைத்தார்.
அர்ஜுன் மகேந்திரன், கடந்த 30 வருட காலமாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் நிதி நிறுவனங்களில் பொறுப்பான பல பதவிகளை வகித்துள்ளார்.
இவர் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் தொடர்பான பட்ட பின் படிப்பை மேற்கொண்டுள்ளார்.
மேலும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த 2002-2004வரையிலான காலப்பகுதியில் இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக இருந்துள்ளார்.
இதேவேளை மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன் மகேந்திரன் நியமிக்கப்படுவதில் இழுபறி நிலை இருந்தமை குறிப்பிடத்தக்கது.