Breaking
Mon. Dec 23rd, 2024
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குறித்த துறையில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற ஒருவர் என சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தற்சமயம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குறித்த விசாரணையை தொடர்ந்தும் முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விசாரணைகள் முடிவில் பொருத்தமான தீர்மானம் எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவத்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராகவும், சார்பாகவும் அரசியல்வாதிகள் பலர் குரல் கொடுத்து வரும் நிலையில், இன்று கூட்டு எதிர்க்கட்சியினர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்ப்பாட்டமானது, இலங்கை வங்கிக்கு அருகில் இருந்து ஆரம்பித்து நிதிஅமைச்சை நோக்கி செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

By

Related Post