Breaking
Sun. Dec 22nd, 2024

வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் மஹிந்த தாய்லாந்துக்கு விஜயம் செய்துள்ளார்.

நேற்று தாய்லாந்தின் உடம் தானி விஹாரையில் நிர்மாணிக்கப்பட உள்ள கலச கோபுரமொன்றிற்கான புனித தாதுக்களை புதைக்கும் நிகழ்வில் மஹிந்த பங்கேற்றார்.

மஹிந்த ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இந்த புனித தாதுக்கள் தாய்லாந்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் நேற்று முன்தினம் மஹிந்த தாய்லாந்து விஜயம் செய்திருந்தார்.

இதேவேளை, லாவோஸ் எல்லைப் பகுதியின் மலை உச்சியில் அமைக்கப்பட்ட சிலையொன்றையும் மஹிந்த ராஜபக்ச நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வுகளில் முன்னாள் வெளிவிவகார அமைச்ர் ஜீ.எல்.பீரிஸும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post