Breaking
Mon. Dec 23rd, 2024

மனித மூளையின் அரிய கண்டுபிடிப்பு ‘ரோபோ!’ ஆனால் அதுவே, வருங்காலத்தில் மனிதனின் அழிவிற்கும் காரணமாகக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதை நிரூபிப்பது போல், ஜெர்மனியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிராங்க்பர்ட் அருகே, பானட்டால் பகுதியில் உள்ளது, ‘வோக்ஸ்வேகன்’ நிறுவனத்தின் கார் தொழிற்சாலை.

இங்குள்ள, ‘அசெம்பிளிங்’ பிரிவில், பல்வேறு வேலைகளுக்கு ரோபோ பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, இரும்புத் தகடுகளை எடுத்து, அடுக்கி வைக்கும் பணியையும் வழங்க, நிர்வாகம் முடிவு செய்தது.

அதற்காக, ரோபோவை தயார்படுத்திக் கொண்டிருந்தார் ஓர் இளைஞர். அப்போது, திடீரென்று ரோபோ தன் இரும்புக் கரங்களால் அந்த இளைஞரின் மார்பை, ‘லபக்’கென்று பிடித்து, அருகே இருந்த இரும்பு பலகையின் மேல் துாக்கிப் போட்டு அழுத்தி விட்டது.

இதில், அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடன் வந்த மற்றொரு இளைஞர், பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்ததால், உயிர் தப்பினார். இது, மனிதத் தவறால் ஏற்பட்ட விபத்து என, வோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. அந்த இளைஞர், தவறாக, ‘புரோக்ராம்’ செய்யும் போது, தவறிழைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தவறான கட்டளையால், மனிதனை விட பல மடங்கு ஆற்றல் இருந்தாலும், பகுத்தறியும் பண்பு இல்லாத ரோபோ, இளைஞரை ஜடப் பொருளாக கருதி, அவரது உயிரைப் பறித்து விட்டது. இந்த சம்பவம், ஜெர்மனியில், ரோபோ பயன்பாடு தொடர்பான சட்டங்களை கடுமையாக்க வழிகோலிஉள்ளது.

Related Post