ஸிக்கா வைரஸிடமிருந்து மனித இனத்தை காப்பாற்றப் போவது, பல நோய்களை பரப்பும் நுளம்புகள் என ஆய்வின் மூலம் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உலகை அச்சுறுத்திவரும் ஸிக்கா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் குழு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
நுளம்புகள் மூலம் பரவும் ஸிக்கா வைரஸிற்கு எதிரான போரட்டத்தில் நுளம்புகளையே களமிறக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட நுளம்புகளின் மூலம் ஸிக்கா, மலேரியா போன்ற நோய்களைத் தடுக்க முடியும் என்று அமெரிக்க மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.
நுளம்புகளின் மரபணுக்களை மாற்றி அவற்றை வெளிவிடுவதன் மூலம், ஸிக்கா மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் நுளம்புகளின் உற்பத்தியைத் தடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.