சிறுமி சேயா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான கொண்டயா என அழைக்கப்படும் துனேஷ் பிரியசாந்த மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
பொலிஸார், தன்னை அடித்து துன்புறுத்தி, பலாத்காரமாக பொய்யான வாக்குமூலமொன்றை பெற்றதாக குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த முறைப்பாட்டின் பிரதிவாதியாக, குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேயாவின் உடலிலிருந்து பெறப்பட்ட மரபணு மற்றும் ஏனைய சாட்சிகளுடன் ஒப்பிடுகையில் கொண்டயா குற்றமற்றவர் என நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொண்டயாவின் மூத்த சகோதரனான சமன் ஜயலத்தின் மரபணு குறித்த வழக்குடன் தொடர்புபட்டதென உறுதிப்படுத்தப்பட்டதால், அவரை நவம்பர் 02வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.