Breaking
Mon. Dec 23rd, 2024

மனித கடத்தல் வியா­பா­ரத்­துக்கு எதி­ராக முறை­யி­டு­வ­தற்­காக ஆரம்­பிக்­கப்­பட்ட பிரி­வுக்கு கடந்த இரண்­டரை மாதங்­களில் 15 முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன. எனவே எதிர்­கா­லத்தில் மனித கடத்தல் வியா­பா­ரத்தை முற்­றாக கட்டுப்படுத்த முடி­யு­மான நட­வ­டிக்கை எடுப்­ப­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்­துள்ளார்.

இது­தொ­டர்­பாக அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

மனித வியா­பா­ரத்­துக்கு எதி­ராக முறை­யி­டு­வ­தற்­காக விசேட பிரி­வொன்று வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இந்த விசேட பிரிவு ஆரம்­பிக்­கப்­பட்­ட­து­முதல் இது­வரை 15 முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன. இந்த முறைப்­பா­டுகள் தொடர்­பான விடயங்கள் சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு அனுப்­பி­வைக்கப்பட்டு அத­னூ­டாக விசா­ர­ணைகள் இடம்­பெறும்.

அதன் பின்னர் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அத­ னூ­டாக சம்­பந்­தப்­பட்ட சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக சட் டம் நிலை­நாட்­டப்­படும். இவ்­வாறு மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பா­டு­களில் சுற்­றுலா விசா மூலம் தொழி­லுக்கு சென்­றமை தொடர்­பி­லேயே அதிக முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன. அதிலும் ஓமான் நாட்டில் இருந்தே அதிக முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.

எனவே ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள இந்த விசேட பிரி­வி­னூ­டாக மனித கடத்­தல்­களை நிறுத்­து­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு முடி­யு­மா­கி­யுள்­ளது. அத்­துடன் இது­தொ­டர்­பாக எந்த தகவல்களையும் வழங்குவதற்கும் மற் றும் தேவையான தகவல்களை பெற் றுக்கொள்வதற்கும் 0112884707 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறி விக்குமாறு அமைச்சர் பொதுமக்களை வேண்டிக்கொள்கிறார்.

By

Related Post