– அஸ்ரப் ஏ சமத் –
சுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதம் அலை நமது இலங்கைத்தீவில் இருந்து இலங்கை நாட்டின் பாவா ஆதம் மலை உச்சியில் கால் பதித்து நீண்ட காலம் அழுது மன்றாடினாா். பின்னா் அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டு இலங்கையில் இருந்து கால் நடையாக மக்கா சென்றாா்கள்.
மல்வானை சகிட் எழுதிய தமிழ் நுால் வெளியீட்டு விழாவில் நுாலாசிரியா சகீத்
சிவனொலிபாத மலை முதல் நபி ஆதம் அலை அவா்கள் பாதம் பட்ட இடம் இதனை நாம் சஹீட் எழுதிய நுாலை நாம் சிங்கள, ஆங்கில மொழிகளிலும் நாம் மொழிபெயா்த்து வெளியிடல்வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தில் வரலாற்று ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் அதிகமாக இருக்கின்ற போதும் அவர்களை ஊக்குவிக்கின்ற எந்த விதமான உருப்படியான திட்டங்களும் நம்மிடம் இல்லை என்று அமைச்சர் றிஷாட் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் மகாவலி கேந்திர நிலையத்தில் மள்வானை MHM சஹீட் எழுதிய மனுக்குலத்தின் தாயகம் இலங்கை என்ற தொனிப்பொருளிள் எழுதிய நூலின் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்ற போது பிரதம விருந்தினராக அவர் பங்கேற்றறு உரையாற்றினார் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் NM அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் AHM பவ்ஸி, முன்னால் அமைச்சர் AHM அஸ்வர், இஷாக் எம்.பி ஆகியோரும் பங்கேற்றனர்.
பேராதனை பல்கலைகழக மெய்யியல் துறை பேராசிரியர் MSM அனஸ் நூலின் ஆய்வுறையையும், தினகரன் உதவி ஆசிரியர் AGM தொளபீக் நூலின் சிறப்புறையும் நிகழ்த்தினர் அமைச்சர் றிஷாட் தனது உறையில் அடுத்த வருடம் ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் ஆகியவர்களின் நலன் சார்ந்த முறையான திட்டமொன்றை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார் நமது சமூகம் சார்ந்த அரசியல்வாதிகள் ஊளகவியலாளர்களை தமது தேவைக்கேற்ப பயன்படுத்து போன்று அவர்களுக்கு கைகொடுக்க உதவ வேண்டும் என்றார் நமது சமூகத்தில் உள்ள திறமையான ஆற்றல் கொண்ட ஊடகவியலாளர்களை ஊக்குவிகப்பது நமது பெரும்பணியாகும்
முன்னால் அமைச்சர் AHM அஸ்வர் தனது பதவிக்காலத்தில் கலைஞ்சர்களையும், ஊடகவியலாளர்களையும் பாராட்டி கொளரவம் வழங்கிய பெருமைக்குரியவர்.
முஸ்லிம் சமூகத்தின் வரலாறுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பேராசிரியர் அனஸின் கருத்துக்களுடன் நான் பெரிதும் உடன்படுகின்றேன் நமது வரலாற்று தடையல்கள் அழிக்கப்படக்கூடாது என்பதில் நான் மிகுந்த அக்கறை கொண்டவன் மன்னாரிலே இவ்வாறான தடையங்களை அழிக்கும் ஆபத்துக்கள் வந்த போது அதனை தன்னந்தனியனாக நின்று எதிர்த்தவன் இவ்வாறு அமைச்சர் கூறினார்.