பஸ்சில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது உடல்நலக்குறைவால் உயிரிழந்த மனைவி யின் சடலத்துடன் நபரொருவர் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்ட சம்பவம் ஒன்று இந்திய மத்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் சிங் லோதி, இவர் தமது மனைவிக்கு உடல் நலக் குறைவால் பிறந்து 5 நாட்களேயான குழந்தை மற்றும் தாய் சனியா பாயுடன் தனியார் பஸ் ஒன்றில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மனைவியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் அவர் பஸ்ஸில் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இதையறிந்த அந்த பஸ் நடத்துநர், அந்த குடும்பத்தினரை பாதி வழியிலேயே வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
அங்கிருந்து வைத்தியசாலைக்கு செல்ல 20 கி.மீ. பயணம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் ராம்சிங் அந்த நடத்துநரிடம் கெஞ்சியும் அவர் அவர்களை பஸ்ஸிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டதால் செய்வதறியாது காட்டுப் பகுதியில் தவித்துள்ளனர்.
இந்நிலையில் ஹசாரி மற்றும் ராஜேஷ் படேல் ஆகிய இரு சட்டத்தரணிகள் அந்த வழியாக சென்றுள்ளனர். இவர்களின் பரிதாப நிலையை பார்த்து உதவி செய்துள்ளனர்.
பின்னர் இச் சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாட்டின் பேரில் பஸ் சாரதி மற்றும் நடத் துநர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.