இந்த நாட்டில் யுத்தம் முடிவுற்று சமாதான சூழல் ஏற்பட்டதன் பின்னரும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லீம்கள் தமது சொந்த நிலங்களில் மீள் குடியேறுவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
வடமாகாண முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் சவால்களை ஒருமித்த குரலில் வெளிப்படுத்தும் நோக்கில் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா கிளிநொச்சி, யாழ்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம் உலமா பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கஉள்ள இவ்வமைப்பு இன்று 10-04-2015 மாலை மூன்று முப்பது மணி அளவில் அதன் பிரதான காரியாலய திறப்பு விழா இடம்பெற உள்ளது.
மன்னாரை மத்திய தலைமையகமாகக் கொண்டு இயங்க இருக்கும் வடமாகாண முஸ்லீம் பிரஜைகள் குழுவின் இவ்விழாவுக்கு, பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் அல் ஹாஜ் ரிஷாத் பதியுதீன் அவர்கள் கலந்து கொள்வதோடு அரசாங்க அதிபர் மாவட்ட செயலாளர் மற்றும் சர்வ மத தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.