Breaking
Sun. Dec 22nd, 2024

மன்னார், அகத்திமுறிப்பு, அளக்கட்டு, மர்ஹபா பாலர் பாடசாலையின் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வு இன்று (19) மாலை, பள்ளிபரிபாலன சபைத் தலைவர் சியாவுத்தீன் மௌலவி தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவித்து பெறுமதியான பரிசில்களையும் வழங்கிவைத்தார்.

இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், மன்னார் வலய பாலர் பாடசாலைகளுக்கான பிரதிப்பணிப்பாளர் அஸ்லம், முசலி கோட்ட உதவிக்கல்விப் பணிப்பாளர் உவைஸ், முசலி பிரதேச சபை செயலாளர் நஜீம், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாஹிர், கிராம நிலதாரி சஹீல், சமுர்த்தி உத்தியோகத்தர்களான எல்பக் மற்றும் ஆஷிக், ஆசிரிய ஆலோசகர் ஜலீஸ், பாலர் பாடசாலைகளுக்கான இணைப்பாளர் அமீருன் நிஸா, முசலி பிரதேச செயலக சிறுவர் சீர்திருத்த உத்தியோகத்தர் ஹில்மான், குடும்பநல மருத்துவ மாது திருமதி சுதர்சன், சக்கரியா ஆசிரியர், அஸ்கர், உவைஸ், நைசர், மாஹிஸ், றம்சின், அஸ்வர், இணைப்பாளர் முனவ்வர், இளைஞர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பள்ளிவாசல் தலைவர் உட்பட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

Related Post