Breaking
Mon. Dec 23rd, 2024

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடிப் படகொன்றின் மீது, மற்றுமொரு படகில் வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டதால், அப்படகில் இருந்த மூன்று மீனவர்களில் ஒருவர், கடலில் குதித்து சுமார் 10 கிலோமீற்றர் தூரம் நீந்தி கரை சேர்ந்துள்ளார். ஏனைய இருவரும் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தின் போது, மேற்படி மீனவர்கள் மூவர் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டதாக உயிர் தப்பிய மீனவர், பொலிஸாரிடம் சென்று அறிவித்துள்ளார். இந்நிலையில், மாயமாகியுள்ள மீனவர்கள் இருவரையும் தேடும் பணியில் கடற்படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

By

Related Post