Breaking
Sun. Dec 22nd, 2024

– கரீம் ஏ. மிஸ்காத் –

சென்றவாரம் மன்னார் கல்லாறு விபத்தில் காயமடைந்த ஏ.ஆர். ஜனூசியா.(27) இன்று காலமானார்.

இவர் பாயிஸ் ஆசிரியரின் மனைவியும், அப்னான் (வயது- 2 1/2), இன்பாஸ் (9- மாதம்) ஆகியோரின் தாயுமாவார்.

ஜனாஸா , இன்று மன்னார் வைத்தியசாலையில் இருந்து கொண்டு வரப்பட்டு, இன்று உளுக்காப்பள்ளம், கரம்பை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இதேவேளை, மர்ஹும் ஜனூசியாவின் தாயும், பாயிஸ் ஆசிரியரும் யாழ்ப்பாணம் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பாயிஸ் ஆசிரியரின் சம்ளப்பணத்தின் மீதி 15000/=  பணம் விபத்து இடம்பெற்ற இடத்தில் காணமல்போய் இது வரைகிடைக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post