Breaking
Sun. Dec 22nd, 2024

மன்னார் நகர மற்றும் பிரதேச சபைகளின் நிர்வாகங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் இருந்ததது,அவர்கள் அதனை வைத்துக் கொண்டு எதனையும் செய்யவில்லை.இவ்வாறானதொரு நிலையில் வன்னி மாவட்டத்தில் எமது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை அதிகரித்து இரண்டு வருட காலத்துக்குள் மன்னார் நகரினை சிறந்ததொரு மத்திய அழகு மிகு நகரமாக மாற்றும் திட்டம் எம்மிடம் உள்ளது என வன்னி மாவட்ட ஜ.தே.மு .முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் பேசாலையில் தெரிவித்தார்.

மன்னார் பேசாலை மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்..

நடை பெறுகின்ற ஒவ்வொரு தேர்தலின் போதும் பேசாலை மக்களை இந்த அபிவிருத்தியின் பங்காளிகளாக மாறுங்கள் என்று அழைத்து வருகின்றேன்.இம்முறை இதனது யதார்தத்தை ஏற்றுக்கொண்டு இன்று எம்முடன் இந்த அபிவிருத்தி பயணத்தில் இணைந்துள்ளதை கானுகின்ற போது மகிழ்வாகவுள்ளது.

அபிவிருத்திகள் என்று வருகின்ற போது அதனை நாம் எல்லோருக்கும் பெற்றுக்கொடுத்துள்ளோம்.வாக்குகளை மட்டும் மையமாக கொண்டு நாம் எந்தப் பணியினையும் செய்வதில்லை,மாறாக எமது மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி நிலை என்பன உயர வேண்டும் என்ற நன்னோக்குடன் நாம் இவற்றை செய்கின்றோம்.இவ்வாறு எம்முடன் இணைந்து தமிழ் மக்கள் பணியாற்றுகின்ற போது அவர்களை பார்த்து துரோகிகள் என்று சொல்கின்றனர்.

மாந்தை பிரதேசத்திற்கு நீங்கள் சென்று அங்குள்ள தமிழ் மக்களுடன் பேசினால் தெரியும்,மன்னார் தீவுப் பகுதியில் உள்ள அபிவிருத்திகளை விட எத்தனையோ அபிவிருத்திகளை அந்த மக்கள் எம்மிடத்தில் இருந்து பெற்றுக் கொண்டுள்ளனர்.நாம் ஏன் இதனை செய்கின்றோம் என்றால்,அந்த மக்களது தேவை என்பதை நாம் இனம் கண்டதினால் தான்,இது போல் வீடமைப்பு திட்டங்கள்,அரச நியமனங்கள்,உள்ளிட்ட இன்னும் எத்தனையோ நியமனங்களை தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ளோம்.

மதவாச்சி தலைமன்னார் புகையிரத சேவை,மதவாச்சி மன்னார் பாதை அமைப்பு அத்தோடு மட்டுமல்லாமல் தலைமன்னாருக்கும் -இராமேஷ்வரத்துக்குமான கப்பல் சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.இதன் மூலம் இந்த பிரதேசம் அபிவிருத்தி கானும் மேலும் பல ஆயிரம் தொழில் வாய்ப்பபுக்கள் உருவாகும்.இவ்வாறு உருவாகின்ற போது அதனை நீங்கள் அனுபவிக்கமால் தவரவிட்டுவிட்டு எதனை செய்யப் போகின்றீர்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

Related Post