வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் நாகதாழ்வு சென் தோமையர் ஆலயத்திற்கான ஒலிபெருக்கி சாதனங்கள் ஆலய நிருவாகிகளிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.
தயா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினராக அமைச்சரின் இணைப்புச்செயலாளர் முஜாஹிர் அவர்களும் கலந்துகொண்டார்
அமைச்சர் றிஷாத் அவர்களது நேரடி அவதானிப்பில் காணப்படும் கிராமங்களில் நாகதாழ்வு கிராமமும் ஒன்றாக காணப்படுகின்றது அதுமட்டுமல்லாது சென்ற வருடம் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கோவிலின் புனரமைப்புக்காக ரூபா 150,000 வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.