Breaking
Sun. Dec 22nd, 2024

வன்னி மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சின் நிதியொதுக்கீட்டில் மன்னார், நானாட்டான் நறுவெளிக்குளத்தில் மைதானமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (27) கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸ், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சார்ள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண உறுப்பினர்களான அமைச்சர் டெனீஸ்வரன், ரயீஸ், ரிப்கான் பதியுதீன், செறோய் உட்பட அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

16388181_1572369156112607_8180190216370258399_n 16174786_1572369466112576_7478572597167482373_n

By

Related Post