மன்னார், பிச்சவாணிப நெடுங்குளம் – அளைக்கட்டு, அல் / ஹைரத் பாலர் பாடசாலையின் விடுகைவிழா இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்ததுடன், மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது, மன்னார் வலய பாலர் பாடசாலைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் அஸ்லம், முசலி கோட்ட உதவிக்கல்விப் பணிப்பாளர் உவைஸ், முசலி பிரதேச பாலர் பாடசாலைகளுக்கான இணைப்பாளர் அமீருன் நிஸா, மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாஹிர், இணைப்பாளர் முனவ்வர் மற்றும் பிச்சவாணிபன்குளம் பள்ளிவாசல் பரிபாலனசபைத் தலைவர் ஹக் உட்பட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.