Breaking
Sat. Jan 11th, 2025

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் காணப்படும் பாடசாலைகளை வளம் மிக்க பாடசாலைகளாக மாற்றும் நோக்குடன் கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களது நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பெரியமடு கிழக்கு பாடசாலைக்கான நுழைவாயில் மற்றும் பாதை திறப்பு விழா நிகழ்வு மாந்தை பிரதேச சபை உறுப்பினரும் ஆசிரியருமான நௌபீல் அவர்களது தலைமையில் இடம்பெற்றது

30வருடங்கள் பின்னர் மீள்குடியேறிய கிராமங்களின் அபிவிருத்தியில் முழு நேரத்தினையும் பிரயோகப்படுத்தி வேகமான அபிவிருத்திகளை மேற்கொண்டு வரும் ரிஷாட் பதியுதீன் அவர்களது செயற்பாட்டில் ஒரு அங்கமாக நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக
கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது பிரத்தியேக செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்

மேலும் இந்த நிகழ்வில் மாந்தை பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு (செல்லத்தம்பு ஐயா) மன்னார் பிரதேசசபை தவிசாளர் முஜாஹிர் ,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாகாண பணிப்பாளர் முனவ்வர். மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜிபுர் ரகுமான் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் நைசர் மற்றும் கிராம மக்கள் கலந்து சிறப்பித்தனர்

Related Post