இன்றய தினம் (6) மன்னார் பெரிய கரிசல் பாடசாலையின் 2017ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது
மூன்று இல்லங்களைக்கொண்டு நடாத்தப்பட்ட இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொரடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் அவர்கள் ” இல்ல விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு நிகழ்வுகளுக்காக மாத்திரம் நடத்தப்படுவது இல்லை மாறாக எமது ஒற்றுமையினை எமது பெற்றோர்களின் பங்களிப்பை ஆசிரியர்களின் தியாகத்தை காட்டுவதாகவே அமைகின்றது எனவே மாணவர்களாகிய நீங்கள் ஒற்றுமையுடன் கல்வி கற்க வேணும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் முழுமையான அக்கறை செலுத்த வேண்டும் அந்த வகையில் இந்த பாடசாலையில் இருந்து நான்கு (04)
மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவானமை உங்கள் கிராமத்திற்கு பெருமை தேடி தந்ததோடு மற்றைய கிராமங்களுக்கும் முன் உதாரணமாக விளங்குகிறது
வெற்றியென்பது திறமையினை மாத்திரம் கொண்டிருந்தாள் கிடைக்காது சக மனிதர்களை மதிக்க வேண்டும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும் பெற்றோர்களில் ஆலோசனைகளை கேட்டு இயங்கவேண்டும் ஒரு தலைமைத்துவ பண்பினை உருவாக்க வேண்டு அனைத்திற்கும் மேலாக ஒழுக்கத்தோடு கூடிய இறையச்சம் இருக்க வேண்டும் மாணவ செல்வங்களாகிய நீங்கள் இன்னும் எத்தனையோ வெற்றிப்பாதைகளை சந்திக்க வேண்டி இருக்கின்றது நமக்கான பாதையினை நாம்தான் தேர்ந்தெடுக்கவேண்டும் எனவே சிறந்த முறையில் கல்வியில் கவனம் செலுத்தி படியுங்கள் மேலும் உங்கள் பாடசாலை சார்பாக என்னிடத்தில் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது அதை நான் செய்து தர தயாராக இருக்கின்றேன் இவ்வருட நிதி ஒதுக்கீட்டில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதை இந்நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன் ” என தெரிவித்தார்