Breaking
Sun. Jan 12th, 2025
மன்னார்  மறிச்சுக்கட்டியில்  இடம் பெற்று மீள்குடியேற்றம் சட்ட ரீதிக்கு உட்படுத்தப்பட்டதொன்று என்றும் இதில் எந்தவொரு வெளிமாவட்ட மக்களும் மீள்குடியேற்றப்படவில்லை என்பதை மன்னார் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ள நிலையிலும் இன்னும் சிங்கள ஊடகங்கள் அதனை இருட்டடிப்பு செய்து ஒரு பக்கசார்பான செய்தியினையே ஒளிபரப்பு செய்வது கண்டனத்துக்குரிய செயலென பல அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு மக்களின் பாதுகாப்பு அமைப்பு,மன்னார் மாவட்ட சமத்துவத்துவத்துக்கும்,இன ஒற்றுமைக்குமான ஜனநாயக மையம்,மன்னார் முஸ்லிம் பிரஜைகள்  ஒன்றியம்,முசலி மண் பாதுகாப்பு ஒன்றியம்.வவுனியா மாவட்ட இன் நல்லுறவுக்கான ஒன்றியம் என்பன வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளது.
இன்று மன்னார் முசலி பிரதேசத்துக்கு விஜயம் செய்த மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் மறிச்சுக்கட்டி கிராமத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்து தற்போது பேசப்படும் வில்பத்து காட்டுப்பகுதியில் வெளிமாவட்ட மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான  விசாரிப்பதற்கு சென்றுள்ளனர்.
இந்த இடத்துக்கு மன்னார் அரசாங்க அதிபர்,பிரதேச செயலளார்,காணி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த வேளையில் மன்னார் அரசாங்க அதிபர் தேசப்பிரிய பிரதேச செயலாளர் ஆகியோர் இந்த மீள்குடியேற்றம் என்பது இங்கு ஏற்கனவே வாழ்ந்த மக்களை கொண்டே இடம் பெறுகின்றது.வெளிமாவட்டத்தை சேர்ந்த எந்தவொரு குடும்பமும் இங்கு குடியேற்றப்படவில்லை.காணி விடுவிப்பு என்பது உரிய முறையில் இடம் பெற்றுள்ளது.சட்ட ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக அதையும் இங்கு அவர்கள் காட்டியுள்ளனர்..
இது இவ்வாறு இருக்கையில் இங்கு வருகைத்திருந்த சிங்கள தொலைக்காட்சிகள் அரசாங்க அதிபர் கூறியரத இருட்டடிப்பு செய்து விட்டு மீண்டும் பழைய குருடி கதவை திருடி என்கின்ற வகையில் பிழையான செய்திகளை ஒளிபரப்பி வருகின்றனர்.
இதன் மூலம் இந்த வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் விசமப் பிரசாரங்களை இந்த சிங்கள இனவாத தொலைக்காட்சிகள் செயற்படுவதாகவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுப்பது தொடர்பில் தமது அமைப்பு ஆலோசித்து வருவதாகவும் இந்த அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் தமது மண்ணுக்கு வருகைத்தந்து பார்த்த போது அவைகள் காடுகளாக காட்சியளித்தன.இவற்றை துப்பரவு செய்ய பிரதேச செயலாளரிடம் அனுமதி பெற்றே இந்த பணிகளை மக்கள் முன்னெடுத்துள்ளது தொடர்பில் இங்கு வருகைத்தந்த ஜேவிபி யின் குழுவினரிடத்தில் இம்மக்கள் சுட்டிக்காட்டியதாகவும் இங்குள்ள மக்கள் எடுத்துக் கூறியதாகவும் இந்த அமைப்பு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post