Breaking
Mon. Nov 25th, 2024

ஆர்.ரஸ்மின்

மன்னார் வில்பத்து விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், அது இன்று அரசியல் பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் ஹலால் உணவில் ஆரம்பித்த பிரச்சினை படிப்படியாக நகர்ந்து சென்று இன்று மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் கைவைக்கின்ற அளவுக்கு கைமீறிப் போயுள்ளது.
பொதுபலசேனா போன்ற சிங்கள கடும்போக்கு அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என்பன அடிப்படையில் ஆதரமற்ற பிரச்சினைகளுக்குப் பின்னால் இருந்துகொண்டு செயற்பட்டது. இதற்கு ஒருசில சிங்கள ஊடகங்களையும் இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலிருந்தே இந்த பிரச்சினை ஆரம்பித்தது. அதன் பின்னர் தெற்கு ஊடகவியலாளர்கள் குழுவினர் குறித்த பிரதேசத்திற்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை தெளிவாக விளங்கிக் கொண்டனர்.
எனினும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியிலும் இந்தப்பிரச்சினை மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. திருகோணமலை மற்றும் சம்பூர் ஆகிய கிராமங்களை கடந்த அரசு முதலீட்டுப்பிரதேசங்களாக பிரகடனப்படுத்தியிருந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அந்தக்காணிகளை விடுவித்து உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
அதுபோல மன்னார் மரிச்சிக்கட்டி கிராம மக்களின் நீண்ட கால பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வைப்பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எம் எல்லோரினதும் எரித்பார்ப்பாகும்.

வில்பத்து குடியேற்றம்

1990ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் பலவந்தமாக இந்தப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு தமது சொந்த மண்ணிலிருந்து வெளியேறி புத்தளம் போன்ற இடங்களில் வாழ்ந்துவந்த முசலி பிரதேச செயலகத்திற்குற்பட்ட மரிச்சிக்கட்டி , பாலக்குழி, கொண்டச்சி, கரடிக்குழி ஆகிய கிராம மக்கள் யுத்தத்திற்குப் பின்னராக காலப்பகுதியில் மீண்டும் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற வேண்டும் என்ற ஆசையுடன் தமது பூர்வீகத்திற்கு வந்த போது அவர்களது சொந்த பூமி காடுகாளக காட்சியளித்துக் காணப்பட்டுள்ளது.
அத்துடன், வில்பத்து சரணாலயத்தின் ஒருபகுதி முசலிப் பிரதேச கிராமங்களின் எல்லையாகும். எனவே, இரண்டு எல்லைகளின் முடிவு தெளிவின்மையால் அந்தக்கிராம மக்கள் ஒருசில அடையாளங்கள் வைத்துக்கொண்டே எல்லைகளை கண்டுபிடித்துள்ளனர்.

எனவே, மன்னார் முசலிப்பிரதேச முஸ்லிம்களின் பூர்வீகத்தை மறந்து கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பின்னரான புகைப்படங்களை வைத்துக்கொண்டு வில்பத்து வனப்பகுதியை அழித்து முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுகிறார்கள் என்ற ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவரும் வரும் கடும்போக்குவாதிகளின் செயற்பாடுகள் மன்னார் மாவட்ட முஸ்லிம் மக்களை மாத்திரமின்றி, முழு வன்னி மாவட்ட முஸ்லிம் மக்களையும் பாதித்துள்ளது.
90வருடங்கள் பழமை வாய்ந்த குறித்த பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் பல காணப்படுகின்றன. கட்டடங்கள் இன்னமும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. அந்தக்கிராம மக்கள் தமது காணிகளுக்கு உறுதிப்பத்திரங்களையும் வைத்திருக்கிறார்கள்.
இந்த விடயத்தில் சரி, பிழை திருத்தம் பார்ப்பதற்கு அரசு எத்தனை குழுக்களை அனுப்பி வைத்தாலும் அது ஒருபோதும் பிழையாக இருக்கப் போவதில்லை. கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கோஷம் போட்ட சேனாக்களை ராஜபக்ஷ அரசு பாலூட்டி வளர்த்தது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையிலான புதிய அரசு அந்த சேனாக்களுக்கு வாய் திறக்கக் கூடாது என கட்டுப்பாடு விதித்தது. எனவேதான் அவர்கள் இன்று மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இந்த விடயத்தை மீண்டும் தூக்கிப் பிடிக்கின்றனர்.

ஆதரபூர்வமாக நிரூபித்தால் பதவியை துறப்பேன்

வில்பத்து வனப்பகுதியை அழித்து முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்வதாக பொதுபலசேனா உள்ளிட்ட கடும்போக்குடைய அமைப்புக்கள் தொடர்ச்சியாக அமைச்சர் ரிசாத் பதியுதீனைக் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அதுமாத்திரமின்றி, ஒருசில சிங்கள தொலைக்காட்சி, இணையத்தளம் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களிலும் அமைச்சருக்கு எதிரான பிரச்சாரங்களை இது ஒரு அரசியல் பழிவாங்களாக முன்னெடுத்த வருகின்றனர்.
இதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் பற்றிய தப்பான எண்ணங்களை திணிப்பதுடன், வன்னி மாவட்ட முஸ்லிம் மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளவரும், வன்னி மாத்திரம் வடகிழக்கில் கால்பதித்துவரும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்குடனும் சமூக வளைத்தங்கள் ஊடாக வில்பத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
எனவே குறித்த பிரச்சினை பற்றி தெளிவுபடுத்தும் வகையில் அமைச்சர் ரிசாத் பதியுதின் கடந்த வாரம் தனது அமைச்சில் விஷேட செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார்.

வுpல்பத்து வனப்பகுதியை அழித்து எதுவிதமான மீள்குடியேற்றங்களும் செய்யப்படவில்லை. ஆனால் இந்த விடயத்தை ஒருசில ஊடகங்கள் பிழையான செய்திகளை மக்களுக்கு வழங்கி வருகின்றன. குறித்த பிரதேசத்தில் உள்ள வில்பத்து காடுகளை அழித்துவிட்டு அங்கு முஸ்லிம் மக்களை குடியேற்றுவதாகவும், பாகிஸ்தான் நாட்டைச் சேர்;த குடும்பங்களையும் அமைச்சர் மீள்குடியேற்றியுள்ளார் என்றும் குறிப்பிடுகின்றனர்.

நான் அவ்வாறாக சட்டவிரோத குடியேற்றங்களை செய்யவில்லை. அதுஅவர்களது சொந்த இடம். ஆதற்கான ஆதாரங்கள் அந்த மக்களிடமே இருக்கின்றன. ஆவர்கள் கூறுவதைப் போல மன்னாரில் எந்த பாகிஸ்தான் நாட்டு குடும்பங்களும் குடியேற்றப்படவில்லை.

எனவே, உண்மைக்குப் புறம்பான வகையில் முசலி மக்களின் உண்மையனா பூர்வீகத்தை தெரிந்துகொள்ளாது மக்கள் மத்தியில் பிழையான தகவல்களை வழங்கி வருவதாகவும் இதுபற்றி ஊடகவியலாளர்கள் மன்னாருக்கு நேரில் வந்து அறிந்துகொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆத்துடன், இவர்கள் என்மீது சுமத்தும் வீணாண குற்றச்சாட்டுககள் தொடர்பில் ஆதரபர்வமாக நிரூபித்தால் எனது அமைச்சுப்பதவியை உடனடியாக இராஜினாமாச் செய்வேன் என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டிருக்கிறார்.

ஆமைச்சர் ரிசாத் பதியுதீன் வில்பத்து வனப்பகுதியை அழித்து அங்கு முஸ்லிம் குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் கடும்போக்குவாதிகள் பாகிஸ்தான் நாட்டவர்களையும் குடியேற்றம் செய்துள்ளார் என்ற அபாணடமான குற்றச்சாட்டு ஒன்றையும் முன்வைத்துள்ளனர்.

எனவே, இந்தக் குற்றச்hட்டுக்கள் மூலம் இவர்கள் நாட்டிலுள்ள ஏனைய இனன மக்கள் மத்தியில் என்ன சொல்ல முனைந்துள்ளார்கள் என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள்.

ஜனாதிபதியின் கவனத்தை பெற்ற வில்பத்து விவகாரம்

வுpல்பத்து விவகாரம் தொடர்பில் பலரும் பல கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீன் குறித்த பிரச்சினையில் ஜனாதிபதி உடனடிhக தலையிட வேண்டும் என்றும் சட்டவிரோத மீள்குடியேற்றங்கள் நடைபெறுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்தற்கு குழுவொன்றை நியமிக்க வேண்டும் எனவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.
ஆந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்த அறிக்கையொன்றை வங்குமாறு சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.

இதேவேளை, வில்பத்து பிரதேசத்தைச் சூழவுள்ள வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் காடழிப்பு, குடியேற்றங்கள் என்பற்றை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி அவசர பணிப்புரையொன்றை விடுத்துள்ளதாக ஜனாதிபதி செலகத்தை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை மன்னார் வில்பத்து பிரதேசத்திற்கு சென்ற மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் குறித்த பிரதேசத்தை பார்வையிட்டதுடன், முஸ்லிம்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டடோர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது குறித்த பிரதேசத்தில் எந்த சட்டவிரோத மீள்குடியேற்றங்களும் இடம்பெறவில்லை எனவும், அந்த மக்கள் தமது சொந்த மண்ணிலேயே குடியமர்த்தப்படுகிறார்கள் எனவும் அங்கு செ;னற குழுவினர்களிடம் மன்னார் மாவட்ட அரச அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய விளக்கமாகக் கூறியுள்ளார்.

ஆத்துடன், அங்கு சென்று உண்மை நிலைமைகளை பார்வையிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் லாகாந்த் அந்த பிரதேசத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் எந்த சட்டவிரோத குடியேற்றங்களையும் செய்யவில்லை என்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

சமூக உரிமைக்காக ஒன்றுபடுவோம்

1990ஆம் ஆண்டு வன்னியிலிருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் அவசரமாக வெளியேற்றப்பட்ட வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் கடந்த 25 வருடங்களாக புத்தளம் போன்ற மாவட்டங்களில் வாழ்ந்து வந்துள்ளனர்.

எனினும் யுத்த நிறுத்தத்திற்குப் பினனர் அவர்கள் தமது சொந்த மண்ணில் வந்து வாழவேண்டும் என்று ஆசையுடன் அங்கு செ;னறால் தமது சொந்த மண்ணில் வாழ முடியாத நிலை காணப்பட்டது. காரணம் அன்று ஒரு இலட்சம் மக்களாக சென்றவர்கள் இன்று பல மடங்குகளாக அதிகரித்துள்ளமையாகும்.
எனவே, எல்லோரும் இருப்பதற்கு அங்கு காணியோ, விடோ இல்லை. எனவே, காணி, வீடு உள்ளவர்கள் தமது சொந்த மண்ணில் இருக்க ஏனையவர்கள் தாம் முன்னர் வாழ்ந்த மாவட்டத்திற்கே திரும்ப சென்று விட்டார்கள்.

காணிப்பிரச்சினை மன்னார் மாவட்ட மக்களுக்கு மாத்திரமின்றி, மூன்று மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு உள்ளது. அதுமாத்திரமின்றி,காணியிருந்தும் சொந்த கிராமத்தில் வாழும் உரிமை மறுக்கப்பட்டு இன்று இனவாத கழுகுப் பார்வையில் மாட்டிக்கொண்டுள்ள மன்னார் முசலிப்பிரதேச மக்களின் உரிமைக்காக அனைவரும் வேறுபாடுகளை மறந்து செயற்பட வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்பபாகும்.

பருவகால வியாபாரிகளைப் போல தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து போகும் எண்ணங்களை மறந்து இது முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் பிரச்சினை. ஆமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு மாத்திரம் கடமையல்ல. இது எல்லோருக்குமான பிரச்சினை என்ற உணர்வுடன் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

இன்று இலங்கை அரசியலில் முக்கிய அமைச்சராக இருக்கின்ற 60 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வைத்து;ள ஒரு கட்சியின் தலைவரான வன்னி மக்களினால் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது உள்ள காழ்ப்புணர்வு காரணமாக இனவாத சக்திகள் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காணிப்பிரச்சினையை பீதாகரமாகக் காண்பிக்க முயற்சிக்கிறார்கள். அவர்ளது தனிப்பட்ட காரணங்களுக்காக மக்களை பலிக்கடாவாக்க நினைப்பது எந்த வகையில் நியாயமாகும்.

மேடைகளில் தலமைத்துவம், ஒற்றுமை பற்றி முழங்க பேசும் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஒருசில சந்தர்ப்பங்களில் கூட்டாக கோரிக்கையை முன்வைத்து அதில் எப்படி வெற்றியை காண்கிறார்களோ அதுபோல முப்பது வருடங்களுக்கும் மேலாக இழுபட்டுக்கொண்டிருக்கின்ற வன்னி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினை உள்ளிட்ட விடயங்களில் அக்கறையுடன் செயற்பட்டு முஸ்லிம்கள் மீது பலவந்தமாக திணிக்கப்படும் இனவாத அடக்குமுறைக்கு சாவுமணி அடிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறான மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமாக தமது சொந்த அரசியல் நலனுக்காக காலத்தை கடத்தலாம் என்று எண்ணிக்கொண்டு தேர்தல் காலங்களில் மாத்திரம் எந்த முக்தைக்கொண்டு வன்னி முஸ்லிம்களிடம் வாக்கு கேட்கப் போகிறீர்கள்.

Related Post