சமூக வளைத்தளமான பேஸ்ப்புக் நிறுவனம் சர்வதேச ரீதியில் மன்னிப்புக் கோரியுள்ளது.
பேஸ்ப்புக் நிறுவனம் அறிமுகப்படுத்திய safety Check நேற்று (27) சிலமணி நேரம் இயங்காமல் போனமைக்காகவவே குறித்த நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
குறிப்பாக திடீர் அசம்பாவிதங்கள் ஏற்படும் சந்தர்ப்பபத்தில் அப்பகுதியின் பேஸ்ப்புக் பாவனையாளர்களுக்கு safety Check Notifications அது தொடர்பான அறிவித்தல் விடுக்கும்.
இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் -தாகூர் வெடிப்பு சம்பவ நேரத்தில் அப்பகுதியின் பேஸ்ப்புக் பாவனையாளர்களுக்கு safety Check இயங்காமல் போயிருந்துள்ளது.
இதனால் பேஸ்புக் பாவனையாளர்களின் அதிர்ப்தியினை தொடர்ந்து பேஸ்ப்புக் நிறுவனமானது மன்னிப்புக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.