யார் யாராவது கோருவதற்காகவோ அல்லது யார் யாராவது தீர்மானம் நிறைவேற்றுவதற்காகவே நாட்டின் சட்டங்களில் மாற்றம் செய்யப்பட முடியாது.
சட்டங்களை இயற்றும் பூரண அதிகாரம் நாடாளுமன்றிற்கு காணப்படுகின்றது.
மரண தண்டனை தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றின் கருத்தை கோரியிருந்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்றில் ஒரு நாள் விவாதம் நடத்தப்பட்டிருந்தது.
எனினும், மரண தண்டனை குறித்து இந்த விவாதங்களின் போது தீர்மானம் எதனையும் எடுக்க முடியவில்லை.
மரண தண்டனை அமுல்படுத்தி வரும் நாடுகள் இரண்டு ஆண்டுக்கு ஒரு தடவை தற்காலிக அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்ய ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் நடைமுறையொன்று காணப்படுகின்றது.
கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் போது இலங்கையும் ஆதரவாக வாக்களித்துள்ளது.
எனவே இரண்டாண்டு காலப்பகுதிக்கு இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படாது.
சட்டத்தை அமுல்படுத்தல் மற்றும் நிறைவேற்றல் ஆகியனவற்றின் முழு அதிகாரமும் நாடாளுமன்றிற்கே காணப்படுகின்றது.
மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சட்டவாக்கம் தொடர்பில் அதிகாரங்கள் கிடையாது என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையை ரத்து செய்யுமாறு மனித உரிமை ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.