மரம் நடுவோம் சுற்றுச் சூழலை பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளின் கீழ் மாகோ, ரந்தனிகம பிரதேசத்தில் மரம் நடும் நிகழ்வொன்று அன்மையில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சதொச பிரதித்லைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) கலந்து கொண்டு மரங்களை நட்டுவைத்தார்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்களான ஸரூக் , ரஸ்மின் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் .
குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் எம்.சி இர்பான்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாகோ பிரதேசசபை உறுப்பினர் அபூ தாலிப், குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட உலமா காங்கிரஸ் தலைவர் ஸரூக் மௌலவி, ரந்தனிகம பள்ளி நிருவாகம், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.