Breaking
Sun. Mar 16th, 2025
மரம் வெட்டுதல், மணல், மண் அகழ்வு தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மரம் வெட்டுதல், மணல், மண் அகழ்வு தொடர்பில் அரசாங்கம் புதிய சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சட்ட மீறல்களில் ஈடுபடுவோருக்கு எவ்வித அரசியல் அழுத்தமும் இன்றி சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சாதாரண நபர் ஒருவர் வீடு கட்டுவதற்கு கட்டடம் ஒன்றை அமைத்துக் கொள்வதற்கு இந்த சட்டத்தில் எவ்வித தடையும் கிடையாது.

புதிய சுற்று நிரூபத்தின் அடிப்படையில் அமைச்சு செயலாளர்களும், பிரதேச செயலாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண் அகழ்வு, கல் உடைத்தல் மற்றும் மணல் அகழ்வு சுற்றாடலுக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாண முதலமைச்சர் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற அனுராதபுரம் மாவட்ட விசேட இணைப்புக் கூட்டத்தில் இந்த விடயங்களை அறிவித்துள்ளார்.

By

Related Post