Breaking
Mon. Dec 23rd, 2024
– ஏ.எச்.எம்.பூமுதீன் –
முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என வர்ணிக்கப்படும் மருதமுனை நகரம் நேற்றிரவு (9) இடம்பெற்ற அ.இ.ம.கா வின் பிரச்சாரக் கூட்டத்தினை அடுத்து வேரோடு துடைத்தெறியப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக 1994 காலத்திற்கு முன்பு திகழ்ந்த மருதமுனை நகரம் பின்னர் முகா வின் கோட்டையாக நேற்று முன்தினம் வரை அனைவராலும் நோக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தான் அ.இ.ம.காவின் பொதுத்தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்றிரவு மருதனையில் இடம்பெற்றது. இதன் மூலம் மருதனை நகரம் அ.இ.ம.கா வின் கோட்டை என நேற்று (9) முதல் மருதமனை மக்களால் பிரகடனப்படுத்தப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் தனித்து களமிறங்கியிருக்கும் அ.இ.ம.காவின் வேட்பாளர் சித்திக் நதீரை ஆதரிக்கும் பிரச்சாரக் கூட்டம் நேற்று மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக அ.இ.ம. காவின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் கலந்து கொண்டு நள்ளிரவிரவையும் தாண்டி அதிகாலை 12.45 மணிக்கு தனது உரையை நிறைவு செய்தார்.
முகா ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரபுக்கு பின்னர் சுமார் மருதமுனை மக்கள் 5000 பேர் ஒரே இடத்தில் குழுமி நின்று தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக நே;றைய மருதமுனை கூட்டம் நோக்கப்படுகின்றது.
அத்துடன் மருதமுனையில் வரலாற்;றிலையே அதிகளவான பெண்களும் கலந்து கொண்ட முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டமாகவும் ரிசாத் பதியுதீன் கலந்து கொண்ட நேற்றைய பிரச்சாரக் கூட்டம் மருதமுனை மக்களால் நோக்கப்படுகின்றது.
முhவின் கோட்டைக்குள் ரிசாத் வர முடியாது என்ற முகாவின் மமதையை உடைத்து மருதமுனை என்றும் முகாவின் கோட்டை தான் என போலியான பிரச்சாரத்தை வெளிப்படுத்த முகாவின் மருதமுனை மத்திய குழு மறுபக்கம் மேற்கொண்ட சூழ்ச்சிகளையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது
மக்கள் வெள்ளத்தால் மருதமுனை கடற்கரை மண் நிறைந்திருந்ததை பொறுக்க முடியாத மருதமுனை மத்திய குழு இரண்டு வகையான சூழ்ச்சிகளை செய்து தமக்கு மருதமுனையில் உள்ள சரிவை மறைக்க திரைமறைவில் சூழ்ச்சிகளை மேற்கொண்டது. பொலிசார் ஊடாகவும் உயர் தரப்பரீட்சைக்கு தோற்றும் ஏழை அப்பாவி குடும்பங்களில் கல்வி பயிலும்  அந்த மாணவரின் குடும்பங்களுக்கு வெறும் 5000 ரூபா வழங்கியும் நேற்றைய அ.இ.ம.காவின் கூட்டத்தை குழப்பியடுத்து சூழ்ச்சியில் இறங்கியமை அந்தக் காரணங்களாகும்.3
இவை எல்லாம் தாண்டி மருதமுனை முகா மத்திய குழுவின் சூழ்ச்சிகளை காலால் போட்டு உடைத்து வெற்றி கரமாக அ.இ.ம.கா மக்கள் வெள்ளத்தின் அனுசரனையுடன் 12.45 மணிக்கு கூட்டத்தை நிறைவு செய்தது.
12.500 வாக்குகளை கொண்ட மருதனை நகரத்தில் 8500 வாக்குகள் அ.இ..ம.கா வுக்கு அளிக்கப்படலாம் என்ற எடுகோள் நேற்றைய அ.இ.ம.கா வின் கூட்டத்தின் மூலம் உறுதியாகியுள்ள நிலையில் மருதமுனையில் திறக்கப்பட்டுள்ள முகா வின் ஒரே ஒரு கடற்கரை அரசியல் செயற்பாட்டுக்கான கிளை இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது.
இது மருதனை வரலாற்றில் இடம்பெற்ற சரித்திரம் முக்கியத்துவமிக்க முகா வின் முதலாவது மூடுவிழா என இன்று காலை முதல் மருதமுனை மக்ககளால் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
அது மட்டுமன்றி தற்போது 02.30 மணியளவில் கிடைத்த தகவல்களின் படி உடன் அமுலுக்கு வரும் வகையில் மத்திய குழு கலைக்கப்பட்டுள்ளதுடன் அதிலுள்ள மிக முக்கியஸ்தர்கள் நால்வர் அ.இ.மகா வுடன் இரகசியமாக இணைந்து கொள்ளும் இரகசிய பேச்சுவார்த்தைகளிலும் தற்போது ஈடுபட்டு வருகின்றமை மருதமுனை முகா வின் ஆணி வேர் அடியோடு அழிக்கப்பட்டு விட்டது என்பதற்கு ஒரு சிறந்த ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியாதாக உள்ளது.
மர்ஹூம் அஸ்ரபுக்கு பின் முதற் தடைவையாக மருதமுனை மக்களின் அமோக ஆதரவுடன் வரவேற்கப்பட்டு ஆதரவளிக்கப்பட்ட முதற் தலைவர் ரிசாத் பதியுதீன் என்ற பெருமையையும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் நபர் என்ற  பெருமையையும் ரிசாத் பதியுதீன் நேற்று நள்ளிரவு ஒட்டுமொத்த மருதமுனை மக்களால் பிரகடனப்படுத்தப்பட்டார்.

Related Post