மருதானை கலீல் தனியார் வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள ஹோட்டலில் இன்று நண்பகல் ஏற்பட்ட தீயினால் அந்தஹோட்டலில் அகப்பட்ட மூன்று பேர் எரிந்து இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறந்தவர்களின் உடல்கள் தற்போது தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பெயர் விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.
இத்தீயினால் முன்னர் செயற்பட்ட அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பழைய கட்டிடம் முற்றாக எரிந்துள்ளடன் மருதானையில் பாரிய போக்குவரத்தும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.