Breaking
Sun. Dec 22nd, 2024

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக உருவாகியுள்ள வெள்ளப்பெருக்கில் மருத்துவமனைகள் பலவும் மூழ்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குருநாகல் போதனா மருத்துவமனையின் சுற்றுவட்டாரத்தில் வெள்ளநீரின் மட்டம் உயர்ந்து மருத்துவமனைக்குள் நீர்புகும் அபாயம் ஏற்பட்ட நிலையில் நேற்று காலை முதல் மண்மூட்டைகளை அடுக்கி இராணுவத்தினர் மருத்துவமனையை பாதுகாத்துள்ளனர்.

தம்புள்ளை ஆறு பெருக்கெடுத்து ஓடுவதன் காரணமாக தம்புள்ளை போதனா மருத்துவமனையின் ஒருபகுதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

ஏனைய கட்டிடங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் மாவட்டத்தில் கலா-பளளுவாவி குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றும் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் பலாகல-கெக்கிராவை பிரதான வீதியின் மேலாக நீர் பாய்ந்தோடுகின்றது.

இதன் காரணமாக கலாவெவ கிராமிய மருத்துவமனையை நம்பியிருக்கும் பளளுவெ வ, திக்கந்தியாவ, நெல்லியகம, கரவிலகல, மிரிஹம்பிடிகம போன்ற பிரதேசங்களில் வாழும் மக்கள் மருத்துவ உதவிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றும் விசேட நடவடிக்கையொன்றை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.

By

Related Post