உலக ஊடகங்களால் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே காட்டிய ஊடகங்கள் முஸ்லிம்களின் மனிதநேய தன்மையையும், இஸ்லாத்தின் புனிதத்தையும் வெளிப்படுத்தி காட்டியதில்லை.
இந்துக்களை 81 சதவீதம் கொண்ட நாடான நேபாளிலும், இந்துக்களை 63 சதவீதத்திற்கும் அதிகம் கொண்ட நாடான இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் 90 சதவீதம் முஸ்லிம்களை கொண்ட நாடான கத்தார், இந்தியாவின் துயரத்திலும், நேபாளின் துயரத்திலும் பங்கெடுத்துக்கொள்வதாக அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து அதிக பாதிப்புக்குள்ளாகிய நேபாள் நாட்டிற்கு உணவு பொருட்களையும், மருந்து பொருட்களையும் ஏற்றிக்கொண்டு கத்தார் விமானம் நேபாளுக்கு விரைந்துள்ளது.
கத்தாரை போன்று மற்றொரு முஸ்லிம் நாடான பாகிஸ்தானிலிருந்தும் நேபாளுக்கு உணவு, மருந்து பொருட்களை விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஜாதியை கடந்து, மதத்தை கடந்து, மொழியை கடந்து, இனத்தை கடந்து, தேசத்தை கடந்து வந்துள்ள மனிதநேயமே இஸ்லாம் காட்டி தந்த வாழ்வியல் நெறியாகும்.