Breaking
Mon. Dec 23rd, 2024
-விடிவெள்ளி MFM.Fazeer-
பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு­கொலை தொடர்பில் மர்­மங்­களைத் துலக்­கலாம் என எதிர்­பார்க்­கப்­பட்டு கன­டா­வுக்கு மேல­திக ஆய்­வு­க­ளுக்­காக அனுப்­பப்பட்ட சீ.சீ.ரி.வி. காட்­சிகள் ஊடாக தெளி­வான எந்த முடி­வுக்கும் வர­மு­டி­யாது என பிரிடிஷ் கொலம்­பியா ஆய்வு நிறு­வனம் கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரி­ஸுக்கு அறி­வித்­துள்­ளது.
குறித்த சீ.சீ.ரி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், அதில் பயணிக்கும் வாகனங்களின் இலக்கங்களையோ அல்லது அதனுள் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை அல்லது நபர்கள் யார் என்பதையோ தெளிவாகக் கண்டறிய முடியாதுள்ளதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது.
 சீ.சீ.ரி.வி. ஆய்வுகள் தொடர்பில்  forensic video and surveillance technology laboratory british columbia institute of technology – canada  நிறுவனத்தின் நிக்ழ்ச்சித் திட்ட தலைமை அதிகாரி டேவிட் மெக்கே கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அனுப்பி வைத்துள்ள சுருக்கமான அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பீ 849/12/03 எனும் வழக்கு தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி காலை 10.15 மணிக்கு தமக்கு கிடைக்கப் பெற்ற சீ.சீ.ரி.வி. காட்சிகளின் ஆய்வுகளின் முடிவின் சுருக்க அறிக்கையாக அந்த அறிக்கையை வழங்குவதாக குறிப்பிட்டே மேற்படி அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 3 ஆம் இலக்க நீதிவான் நீதி மன்றினால் அனுப்பட்ட சீ.சீ.ரி.வி. காட்சிகள் அடங்கிய இறுவெட்டுக்களும் அது தொடர்பிலான  கேள்விக்கொத்தும் இரு பொலிஸ் அதிகாரிகள் ஊடாக தமக்கு கிடைக்கப் பெற்றதாகவும் அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் குறித்த கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் தெளிவான தீர்மானங்களைப் பெற முடியவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாகனத்தின் இலக்கத்தகடு மற்றும் அதில் உள்ள நபர்கள்  தொடர்பில் குறித்த கேள்விக்கொத்தில் கோரப்பட்டிருந்த போதும் அது குறித்து முடிவெடுக்க முடியாது என குறிப்பிட்டு அதற்கான காரணங்களாக 5 விடயங்களையும் குறித்த ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
 குறித்த வீடியோ காட்சிகள் மிக தரம் குறைந்ததாக இருப்பதாகவும்,  ஆய்வுகளுக்கு அனுப்புவதற்காக சேமிப்பகங்களில் குறித்த வீடியோ காணொளிகள் சுருக்கப்பட்டு பதிவு செய்யப்படும் போது,  உண்மை சீ.சீ.ரி.வி. காட்சிகள் என நம்பப்படும் குறித்த காட்சிகள் மாற்றமடைந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும், ஹெட் லைட் மற்றும் பாதையோர மின் குமிழ்களின் வெளிச்சத்துக்கு மத்தியில்  கமராக்களில் வாகனங்களின் இலக்கம் தொடர்பில் தெளிவான பதிவுகள் இல்லை எனவும் காட்சிகள் தரம் குறைந்ததாக உள்ள நிலையில் வாகனத்தின் ஜன்னல் கண்ணாடிகளுக்கு அப்பால் (வாகனத்தின் உள்ளே) இருப்பவர்கள் தொடர்பிலும் முடிவெடுக்க முடியாது எனவும் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி அதிகாலை நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவின் சாலிகா மைதானத்தின் மதிலுடன் மோதிய நிலையில் எரிந்துகொண்டிருந்த காருக்குள் இருந்து வஸீம் தாஜுதீன் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது அவரது மரணம் படுகொலை என நீதிமன்றம் தீர்மானித்துள்ள நிலையில் விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

By

Related Post