-A.S.M. Javid-
ஊடகவியலாளரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நீண்டகால பொருலாளருமான மர்ஹூம் பாயிசின் நினைவுக் கூட்டம் நேற்று (20) போரத்தின் தலைவர் என்.எம்.அமீனின் தலைமையில் மாளிகாகந்த அஷ்சபாப் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதன்போது பாத்திமா இஸ்ரா எழுதிய கொந்தம மித்ரா எனும் சிங்கள நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீனும், கௌரவ அதிதிகளாக அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் அசு மாரசிங்க, முஜீபுர் ரஹ்மான், அலி ஸாஹிர் மௌலானா ஆகியோரும் அரசாங்க தகவல் திணைக்கள ஆசிரியர் துஷால் விதானகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருநதனர்.
இதன்போது மர்ஹூம் பாயிசின் சேவையைப் பாராட்டி மகள் மற்றும் மகன் ஆகியோருக்கு போரத்தினாலும், நலன் விரும்பிகளாலும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான புலமைப் பரிசில்களுக்கான பண அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டதுடன் பாத்திமா இஸ்ரா எழுதிய கொந்தம மித்ரா எனும் சிங்க நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் அமைச்சர் றிஷாதிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் வரவேற்புரையை போரத்தின் உயர் பீட உறுப்பினர் எம்.பி.எம்.பைரூஸ் வழங்கியதுடன். பாயிசின் நினைவுப் பேருரைகளை முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் என்.எம். அமீன் ஆகியோரும் நன்றியுரையை போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிகானும் வழங்கினர்.