Breaking
Tue. Mar 18th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளர் மர்ஹூம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களின் ‘வாழ்வும் பணியும்’ நினைவேந்தல் நிகழ்வு, இன்று சனிக்கிழமை (27) கல்முனை, ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு விஷேட உரை நிகழ்த்தியதுடன், முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நினைவுரை ஆற்றியிருந்தார்.

மேலும், மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் M.S.S. அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி N.M. ஷஹீட், தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், செயலாளர் நாயகம் S .சுபைர்தீன், பிரதித் தலைவர் M.S. அனீஸ், தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் K.M.A. றஸாக் (ஜவாத்), பிரதித் தவிசாளர் M.I. முத்து முஹம்மட், பிரதி செயலாளர் நாயகம் M.A. அன்சில், பிரதி தேசிய அமைப்பாளர் M.A.M. தாஹிர், சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் I.L.M. மாஹிர் உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட புத்திஜீவிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள், வை.எல்.எஸ். ஹமீடின் குடும்பத்தினர் மற்றும் கட்சியின் ஆதவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.

Related Post