அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகச் செயலாளர் மர்ஹூம் திரு.வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களின் “வாழ்வும் பணியும்” நினைவேந்தல் நிகழ்வு, நாளை சனிக்கிழமை 27.01.2024, பிற்பகல் 03.45 மணிக்கு, கல்முனை, ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய சிறப்புச் சொற்பொழிவு ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
