கடந்த ஆண்டின் ஜுலை மாதம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட அப்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல்மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் விவாதம் சூடுபிடித்த நிலையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக இருவருக்கும் இடையில் கடுமையான தனிப்பட்ட பகை உணர்வு வளர்ந்திருந்தது.
தற்போது இருவரும் ஒரே அமைச்சரவையில் சகாக்களாக அமர்ந்து, தேசிய அரசாங்கத்தின் பங்காளிகளாக மாறியுள்ளனர்.
இந்நிலையில் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய ரக்பி விளையாட்டுப் போட்டியொன்றை பார்வையிட வருகை தந்திருந்த தயாசிறியும், ஹரினும் அருகருகே ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.
அத்துடன் ஒருவருக்கொருவர் கேலி, கிண்டல் செய்து சிரித்து மகிழ்ந்திருந்தனர்.
தேசிய அரசாங்கத்தின் கைங்கரியத்தில் கீரியும், பாம்பும் ஒன்றாக கூடிக்குலாவுவதாக இதனைக் கண்ட பார்வையாளர்கள் கிண்டல் அடித்துள்ளனர்.