-Junaid M. Fahath –
தற்போது இலங்கை அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள வில்பத்து பிரதேசத்தை சார்ந்துள்ள மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் 08.08.1970 ஆம் வருடம் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாயல் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சிதைவடைந்து காணப்படுகிறது..
1970 களில் முஸ்லிம்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்ததற்கான மிக முக்கிய சான்றுகளாக இவை காணப்படுகிறது..
தற்போது மரங்களாளும் புற் புதர்களாளும் பெரும்பாலான பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இவை முழுமையாக மூடப்படுமானால் இவ் சான்று மறைந்து போகும் இதனால் இலங்கை சமூகம் மறந்து போகும்.
ஆகவே இப் பிரதேசத்தில் உள்ள பொறுப்பு வாய்ந்தவர்கள் இதனை துப்பரவு செய்து சரியான முறையில் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.