வீசா காலம் முடிவடைந்த பின்னர் மலேசியாவில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு டிசம்பர் 31ஆம் திகதி வரை மலேசியா கால அவகாசம் வழங்கியிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
மலேசியாவுக்கு வேலைசெய்யும் நோக்கில் சென்று வீசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருப் பவர்கள் இந்தக் காலப்பகுதி யில் எதுவித தண்டனையு மின்றி நாடு திரும்ப முடியும் என பணியகம் தெரிவித் துள்ளது.
கடவுச்சீட்டைத் தொலைத்த நிலையில் நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளவர்கள் கூட தற்காலிக பயண ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு நாடு திரும்ப முடியும். கடவுச்சீட்டைத் தொலைத்தவர்கள் தொலைந்த கடவுச்சீட்டின் போட்டோ பிரதி, பொலிஸ் முறைப்பாடு, புகைப்படங்கள் மற்றும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துடன் தற்காலிக பயண ஆவணத்துக்கு விண்ணப்பிக்க முடியும். மலேசியாவிலுள்ள இலங்கைத் உயர்ஸ்தானிகராலயத்தில் இது தொடர்பில் விண்ணப்பிக்க முடியும். 165 ரிங்கிட்களைச் செலுத்தி இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
அதேநேரம் நாடு திரும்ப விரும்புவோருக்கு விமானப் பற்றுச்சீட்டுக்களும் பெற்றுக் கொடுக்கப்படும். 400 ரிங்கிட்களை செலுத்தும் பட்சத்தில் அவர்களுக்கான விமான டிக்கட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். 7 நாட்கள் செல்லுபடியாகக் கூடிய விமான டிக்கட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு மலேசியலாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்புகொள்ள முடியும்.