Breaking
Wed. Jan 15th, 2025

மனித சமுதாயத்தில் எதிர்நோக்கப்படும் சிக்கல்களுக்கும்,  பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து அவற்றை எவ்வாறு தீர்ப்பது? என்பது தொடர்பிலும், நிலைபேறான அபிவிருத்தி சம்பந்தமாகவும், மலேசியாவில் எதிர்வரும் செப்டம்பர் 05 – 07 வரை நடைபெறவுள்ள, பங்கோர் டயலொக் (Pangkor Dialogue) சர்வதேச மாநாட்டில், பிரதம விருந்தினராகப் பங்கேற்குமாறு கோரி, மலேசிய ஏற்பாட்டாளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீனை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இன்று (11/05/2016) இடம்பெற்ற இந்த சந்திப்பில், மலேசிய – இலங்கை நட்புறவு, மலேசிய – இலங்கை வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தல் ஆகிய விடயங்களையும் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் தூதுக்குழுவினர் பரிமாறிக்கொண்டனர்.

7M8A6227 7M8A6203

By

Related Post