Breaking
Mon. Mar 17th, 2025

– க.கிஷாந்தன் –

மலையகத்தில் பெய்யும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று திறக்கப்பட்டுள்ளன.

இதனால் அதன் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்தேக்கத்தின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக மழை காரணமாக  சென்கிளயார் நீர்வீழ்ச்சியில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது.

மலையகத்தில் உள்ள ஏனைய நீர்தேக்கங்களின் நீரின் மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியிலும்,  ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வீதி வழுக்கும் அபாயம் இருப்பதாகவும் இதனால் வாகன சாரதிகள்  அவதானமாக  வாகனங்களை  செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

By

Related Post