நாட்டில் நிலவிவரும் கடுமையான வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக மலையகத்தின் பல பிரதேசங்களிலும் காணப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைய ஆரம்பித்துள்ளது. கொஸ்லந்தை உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வற்றிப்போகும் நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
658 அடி உயரமானதும் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய உயரமாக தியலும நீர் வீழ்ச்சியின் நீர்மட்டமும் பெருமளவில் குறைவடைந்துள்ளது. மலைகத்தை அண்டிய பிரதேசங்களில் அண்மைய நாட்களாக போதியவு மழை வீழ்ச்சி கிடைக்காமையினால் மேற்படி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைய ஆரம்பித்திருக்கும் நிலையில் மலையக மக்கள் நீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரலாமென அச்சம் தெரிவிக்கின்றனர்.