இக்பால் அலி
கல்வியமைச்சின் 2014/08/08 ந் திகதி இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தலில் மலையக பிரேதேச தமிழ் பாடசாலைகளில் கற்பிப்பதற்காக மூவாயிரத்து இருபத்தி நான்கு ஆசிரிய வெற்றிடங்களுக்கான நியமனங்களை எதிர்வரும் 2014/04/20ந் திகதிக்கு முன் வழங்குவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வரும் இவ்வேளையில் மலையக முஸ்லிம் பாடசாலைகளின் ஆசிரிய வெற்றிடங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் யூ சி எம் சி உறுப்பினர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் கவனத்திற்கு மேற்படி விடயங்களை கொண்டுவரப் பட்டது.
இதன் பயனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் வை எல் எஸ் ஹமீது அவர்களும் அக்கட்சியின் கிழக்கு மாகாண உறுப்பினர் சுபைர் அவர்களும் இன்று (2014/04/02) பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டுவந்தார்கள்.
அதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம அவர்களின் விஷேட குறிப்புடன் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப் பட்டு அமைச்சரவை பத்திரிகையொன்றின் மூலம் மலையக முஸ்லிம் பாடசாலைகளின் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
அதேவேளை மலையக முஸ்லிம் கவுன்சில் ஏற்பாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஸ்ரேஷ்ட சட்டத்தரணி ஜனாபா பாயிஸா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் வை எல் எஸ் ஹமீது, அக்கட்சியின் கிழக்கு மாகாண உறுப்பினர் சுபைர் ஆகியோர் உட்பட்ட குழுவினர் இதுவிடயமான சட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆலோசனை கூடமொன்றும் இன்றைய தினம் நடைபெற ஏற்பாடாகி உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.