Breaking
Tue. Dec 24th, 2024

அப்புத்தளை மவுசாகலை பெருந்தோட்டத்தின் 63 தொழிலாளர் குடும்பத்தினரைக் கொண்ட 249 பேரை மண்சரிவு அபாய நிலையற்ற டியகலை, பண்டாரயெலிய, பிட்டரத்மலை ஆகிய இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அக்கரப்பத்தனை பிளான் டேசன் பொறுப்பிலுள்ள மவுசாகலை பெருந்தோட்டம் மண்சரிவு அபாயம் ஏற்பாடும் பகுதியாக தேசிய கட்டட ஆய்வகம் தெரிவித்துள்ளது. அத்துடன் அத் தோட்டத்தின் தொழிலாளர் குடும்பங்களை அத் தோட்டத்திலிருந்து உடன் வெளியேற்ற வேண்டுமென்று ஆய்வகத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊவா மாகாண சபை உறுப்பினர்களான ஏ.கணேசமூர்த்தி, ஏ. சிவலிங்கம் ஆகியோர் இ.தொ.க. உப தலைவர் செந்தில் தொண்டமானின் பணிப்பின் பேரில் மவுசாகலை பெருந்தோட்டலுவலகத்தில் அக்கரப்பத்தனை பிளான்டேசன் பொது முகாமையாளர் எய்ச்.எம்.எஸ்.கூட்டப் பிட்டிமாவுடன் பேச்சு வார்த்தைகளை 8.10.2015 இல் மேற்கொண்டனர்.

அப்பேச்சுவார்த்தையில், மவுசாகலை தோட்ட தொழிலாளர்களை மாக்காந்தை தோட்டத்தில் குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யப்படுமென்றும் தோட்ட முகாமைத்துவம் தெரிவித்த போதிலும் தொழிலாளர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

மாக்காந்தை தோட்டமும் மண்சரிவு அபாயம் ஏற்படும் பிரதேசமாக இனம் காணப்பட்டிருப்பமையினாலேயே தொழிலாளர்கள் குறிப்பிட்ட மாக்காந்தை தோட்டத்திற்கு செல்ல மறுத்தனர்.

இறுதியாக தியகலை, பண்டாரெலிய, பிட்டரத்மலை ஆகிய தோட்டங்களில் ஒன்றை தொழிலாளர்களே முடிவு செய்ததால் அத் தோட்டத்தில் தற்காலிக குடியிருப்புகள் அமைத்து தரப்படுமென்று தோட்ட முகாமைத்துவம் தெரிவித்தது.

By

Related Post