மஸ்கெலியா காட்மோர் கல்கந்த தோட்டத்தில் இன்று காலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (13) காலை 07 மணியளவில் இடம் பெற்றது.
இந்த அனர்தத்தினால் 41 குடும்பங்களைச் சேர்ந்த 211 பேர் இடம்பெயர்ந்து தோட்டத்தில் உள்ள வெளிகல உத்தியோகத்தரின் விடுதியிலும், தோட்ட ஆலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பாதிக்கபட்ட மக்களுக்கான நிவாரண பணிகளை மேற்கெள்ள தோட்ட நிர்வாகம் மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகம் முன்வந்துள்ளமை குறிப்பிடதக்கது.
இதேவேளை கடந்த வருடம் குறித்த தோட்டத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, குறித்த தோட்ட மக்கள் சுமார் 03 மாத காலம் காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்ட போதிலும் குறித்த மக்களுக்கான மாற்று நடவடிக்கைகளை மலையக அரசியல்வாதிகள் எவரும் முன்னெடுக்கவில்லை என கல்கந்த தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
Comments are closed.