Breaking
Thu. Dec 26th, 2024

அஸ்ரப் ஏ சமத்

முன்னைய ராஜபக்ச அரசில் வெளிநாட்டு தூதுரகங்களில் அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட 62 தூதுவர்கள் 32 தூதுவராலயங்களில் கடமையாற்றும் சகலரையும் இந்த வாரத்திற்குள் நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்டு நாட்டுக்கு வரவழைக்கப்பட நடவடிக்கை எடுத்துள்ளார் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர.

இவற்றில் 1 மாதத்திற்கு முன் நியமிக்கப்பட்ட ஹுசைன் முஹம்மத் ஜித்தாவில் உள்ள டொக்டர் உதுமாலெப்பையும் அடங்குகின்றனர். இதில் அனேகமான தூதுவர்கள் கடந்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்காக இலங்கை வந்து தேர்தலில் ஈடுபட்டு விட்டு தேர்தல் முடிவு வெளியான அடுத்த நாள் தமது நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
வெளிநாட்டு அமைச்சின் புதிய செயலாளராக சித்திராங்கனி வகிஸ்வர நியமிக்கப்பட உள்ளார்.

முன்னாள் வெளிநாட்டு அமைச்சராக பதவி வகித்த காலம் சென்ற லக்ஸ்மன் கதிர்காமர் தூதுவர்கள் நியமிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய கொள்கையை தான் கடைபிடிப்பதாகச் அமைச்சர் சொன்னார்- அதில் இலங்கை வெளிநாட்டு சேவை அரச அதிகாரிகளுக்கு 70 வீதமும் 35 வீதம் அரசியல் ரீதியாகவும் அவர்கள் கல்வித்துறையில் தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் கோட்டா ராஜபக்சவுக்கு ஆதரவான படை அதிகாரிகளையும் தேர்தலில் தோல்வியுற்றவர்களையும் துர்தவர்களாக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மைத்திரி தேர்தலில் குறிபிட்டிருந்தமைக்கு அமைவாக தூதுவர்கள் நியமனங்கள் அரச அதிகாரிகளுக்கே வழங்குவேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post