Breaking
Mon. Dec 23rd, 2024

களுத்­துறை மாவட்ட முஸ்­லிம்கள் பேரி­ன­வாத வலையில் சிக்கிவிடாமல் தமது பெறு­மதி மிக்க வாக்­கு­களை பய­னுள்ள வகையில் அளித்து அதன் மூலம் தமது கிரா­மத்­திற்கும், சமூ­கத்­திற்கும் கூடிய சேவை­களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இம் மாவட்­டத்தில் மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக்­கு­வ­தற்கு எந்த ஒரு முஸ்­லிமும் வாக்­க­ளிக்­கப்­போ­வ­தில்லை என்­பது உறு­தி­யாகும் என பேரு­வளை நகர சபை முன்னாள் தலைவர் மஸாஹிம் முஹம்மத் கூறினார்.

பேரு­வளை மரு­தானை, மாளி­கா­ஹேனை பகு­தி­களில் நடை­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களில் பேசும் போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில், பேரு­வளை என்­பது முன்னாள் சபா­நா­யகர் தேச­மான்ய எம்.ஏ.பாக்கீர் மாக்­கா­ரினால் அமைக்­கப்­பட்ட ஐக்­கிய தேசியக் கட்­சியின் கோட்­டை­யாகும். இந்த ஐ.தே.கட்சி கோட்­டையை மஹிந்த ராஜபக் ஷ அல்ல. அவ­ரது தந்தை டி.ஏ.ராஜபக் ஷ வந்து போட்­டி­யிட்­டாலும் உடைக்க முடி­யாது.

முஸ்­லிம்­களை நசுக்கி அவர்­க­ளது பொரு­ளா­தா­ரத்தை மட்டம் தட்டி, பள்­ளி­வா­சல்­களை உடைத்து, முஸ்லிம் வீடுகள், பள்­ளி­வா­சல்­களை தீ வைத்து கொளுத்­திய சம்­ப­ வங்­களை நாம் மறந்­து­வி­ட­வில்லை. இன­வா­தி­க­ளுக்கு உற்­சா­க­மூட்டி பௌத்த வாக்­கு­களைப் பெற்றுக்கொள்ள மஹிந்த ராஜபக் ஷ ஆடிய ஆட்டம் கை கூட­வில்லை.

தமிழ் – முஸ்­லிம்­களின் வாக்­குகள் தேவை­யில்லை என்று ஜனா­தி­பதி தேர்­த லின் இறுதிப் பிர­சாரக் கூட்­டங்­களின் போது கூறிய மஹிந்த இன்று வெட்­க­மின்றி முஸ்­லிம்­க­ளிடம் வாக்குக் கேட்­கிறார்.

மஹிந்­தவின் ஆட்சி முஸ்­லிம்­க­ளுக்கு இருண்ட யுக­மாக இருந்­தது. இந்த ஆட்சி இனிமேல் வரக்­கூ­டாது என்­பது முஸ்­லிம்­களின் பிரார்த்­த­னை­யாகும்.

அவர் பிர­த­ம­ரானால் சிறு­பான்மை மக்­களை பழி வாங்குவார். மஹிந்த ராஜபக் ஷவை பிரத மராக்க சில சுயநல முஸ்லிம்கள் இன்னும் அவருடன் இருக்கின்றனர். இந்த துரோகி களை சமூகம் ஓரங்கட்ட வேண்டும் என்றார்.

Related Post