முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எனக்கும் கூட சரியான அந்தஸ்து தரப்படவில்லை. ஆனாலும், நான் கட்சியை விட்டு ஓடிவிடவில்லை என எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எந்தப் பதவி என்றாலும் கட்சிக்காக தொடர்ந்து போராடுவதே சிறந்தது. எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பெப்ரவரி 14 ஆம் திகதியன்று கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஜனாதிபதியாக நீடிக்கும் நிலையில், எதிர்வரும் பொதுத்தேர்தலி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்து புதிய அரசாங்கத்தை நிறுவபோவதால் ஜனாதிபதி வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரையே பிரதமராக நியமிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஊவா மாகாணசபையில் முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுக்கு ஆதரவளித்த கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் தலைமை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் ஊழல்களில் தொடர்புடையவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.