Breaking
Sun. Jan 12th, 2025

முன்னாள் ஜனாதிபதியை விசாரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா? என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனத்தை, பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

இன்றைய தினம்  பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் அவர் சார்ந்த தரப்பினருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியை விசாரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா? என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனத்திற்கு இன்று பதில் வழங்கப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில், அந்த ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டுள்ளது.

By

Related Post